அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்




எங்கும் வறுமை, வன்முறை
மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக நுழைய நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, கெளதாமாலா இடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக படகுகள் மூலம் தப்பித்தனர்.
"எங்கும் வறுமை, வன்முறை" - அமெரிக்கா நோக்கி படையெடுக்கும் மக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள். வறுமை, வன்முறை காரணமாக, அவற்றிலிருந்து தப்பிக்க அமெரிக்காவிற்குள் செல்ல முயல்வதாக அவர்கள் கூறுகிறார்கள். ஏறத்தாழ 2000 குடியேறிகள் இந்த பயணத்தில் இருப்பதாக அசோஸியேடட் பிரஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.