(அப்துல்சலாம் யாசீம்)
30 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு இரண்டு மாத கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு இன்று (03) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச். எம் ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த திமுது திஸ்மந்த (52 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து வருவதாகவும், பாவித்து வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபரான இவரை சோதனையிட்ட போது இவரிடம் இருந்து 30 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டை தான் ஒப்புக் கொள்வதாகவும் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் தெரிவித்தார்
இதனை அடுத்து நீதவான் சந்தேக நபருக்கு இரண்டு மாத கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் பத்தாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்த தவறும் பட்ஷத்தில் மேலதிகமாக 4 மாத கடூழிய சிறை இதனை வழங்குமாறும் கட்டளையிட்டார்.
Post a Comment
Post a Comment