ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் நிலத்தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையினால் குறித்த வீதியில் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நிவ்வெளிகம பிரதேசத்திலே பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் முதல் வீதி போக்குவரத்தை பொலிஸார் தடை செய்துள்ளனர்.
கடந்த வாரம் காசல்ரீ நிர்த்தேக்கத்தை அண்மித்த நிவ்வெளிகம குடியிருப்பு பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டமையினால் ஐந்து குடியிருப்புகளை சேர்ந்த 25 இற்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இந் நிலையில் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியியிலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்மையினால் குறித்த வீதி மூற்றாக மூடப்பட்டுள்ளது.
பாதை மூடப்பட்டமையினால் ஹட்டன், பலாங்கொடை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, ஒல்ட்டன் சாமிமலை பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் வாகன சாரதிகள் மஸ்கெலியா ஊடாக நோட்டன் பாதையையும், சாஞ்சிமலை வழியாக டிக்கோயா பாதையையும் போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(மலையக நிருபர் இராமச்சந்திரன்)

Post a Comment
Post a Comment