பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் துப்பாக்கி சூடு




தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். 

குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது. 

இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவ்வாறு இருவர் காயமடைந்துள்ளனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். 

சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.