கணவனைப் பார்வையிட, கஞ்சாவுடன் சென்றாள்,மனைவி




( அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை சிறைச்சாலை அதிகாரிகளினால் 1152 மில்லியன் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (24) நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம், எச், எம், ஹம்ஸா முன்னிலையில்  இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை அவரது வாசஸ்தலத்தில்  ஆஜர்படுத்திய போதே  இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்  திருகோணமலை, நெல்சன்புர பகுதியைச் சேர்ந்த விக்ரமகமகே  பத்மசீலி (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது  திருகோணமலை சிறைச்சாலையில்  கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  பொலிஸ் உத்தியோகத்தரான  தனது கணவரை  பார்வையிடச் சென்றபோது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து ஆயிரத்து 152   மில்லிகிராம்  கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.



கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவுடன் துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து வேளை பொலிஸார் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 5 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார் சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.