மக்களை உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை




மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதனால் மஹாவலி ஆற்றின் நுகவெல, உலப்பனை மற்றும் பொல்கொல்ல பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன் ரன்தெனிகல நீர்தேக்கத்தின் வான்கதவுகள் நள்ளிரவு தானாக திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.