நான் படிக்கும் காலத்தில் தொலைக்காட்சி பார்த்ததில்லை செல்போனும் பாவித்ததில்லை.தினமும் பயிற்சிசெய்து படித்தேன். வைத்தியராக வந்து மனிதகுலத்திற்கு சேவையாற்றுவதே எனது இலக்கு.
என்கிறார் காரைதீவுக்கோட்டத்தில் முதலிடத்தையும் அம்பாறை மாவட்டத்தில் ஏழாம் இடத்தையும் பெற்ற காரைதீவு இ.கி.சங்க ஆண்கள் பாடசாலை மாணவன் கேந்திரமூர்த்தி கஜருக்சன்.
காரைதீவு வரலாற்றில் 191புள்ளிகளைப்பெற்ற முதல் மாணவன் செல்வன் கஜருக்சன் ஆவார்.
அவரது இல்லம் சென்று வாழ்த்தி அவரிடம் சிலகேள்விகளைக்கேட்டபோது இவ்வாறு பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:
நான் இந்த 191 புள்ளியை விட கூடுதலாகவே எதிர்பார்த்தேன். எனினும் இப்புள்ளியுடன் திருப்தியடைகிறேன். எனது வெற்றிக்கு யோகா ரீச்சர் பிரியதர்சன் சேர் அம்மா அப்பா உள்ளிட்ட பலர் காரணமாகவுள்ளனர். என்றார்.
அவரது தந்தையாரான சம்மாந்துறைக் கல்வி வலயகணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி கூறுகையில்: இவரது வெற்றிக்கு அவரது கணிதப்புலமை பிரதான காரணமாயிருக்கலாமெனக் கருதுகிறேன். என்னால் முடியாத பல கணிதப்புதிர்களை அவர் வேறு விதமாக செய்வார். என்றார்.
Post a Comment
Post a Comment