(க.கிஷாந்தன்)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை உரிய வகையில் வழங்க வேண்டும் என கோரி அட்டன் நகர வர்த்தகர்கள் 24.10.2018 அன்று காலை 9.30 மணியளவில் அட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது வர்த்தக கடைகள் மூடப்பட்டு நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தி, கறுப்பு கொடி பிடித்து தமது கடும் எதிர்ப்பினை பேரணியினூடாக அட்டன் பஸ் தரிப்பிடத்திலிருந்து மல்லியப்பு வரை சென்று மீண்டும் மணிகூட்டு கோபுரம் வரை வந்தடைந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததாவது, பெருந்தோட்ட தொழிலாளர்கள் உழைக்கும் பணத்திலேயே எங்களுடைய வருமானத்தை ஈட்டிக்கொள்வதோடு, எமது தொழில் மற்றும் பிள்ளைகளின் கல்வி, குடும்ப பொருளாதாரம் என பல்வேறு அபிவிருத்திகைள கண்டு வருகின்றோம்.
இன்று தோட்ட தொழிலாளர்களுடைய சம்பளம் ஆயிரம் ரூபா என்பது பெரிய தொகை அல்ல. இன்று கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கூட நாளொன்றுக்கு 1000 தொடக்கம் 1500 ரூபா வரை வழங்குகின்றோம்.
தொழிலாளர்கள் மழை, வெயில் பாராமல் பல்வேறுப்பட்ட அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள். கம்பனி அதிகாரிகள் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் கூட இவர்களின் வருமானத்திலேயே வாழ்கின்றனர்.
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் செய்யும் போது பல்வேறுப்பட்ட இடர்களை சந்தித்து போராட்டங்களை முன்னெடுத்து இறுதி கட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெறுகின்றது.
எனவே இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இதற்கு தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு தொழிற்சங்கத்தின் இலாபத்தை கருத்திற் கொண்டு செயற்படாமல் ஒற்றுமையாக இருந்து சம்பள பேச்சுவார்த்தைக்கு முடிவு எடுக்க வேண்டும் என தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்
Post a Comment
Post a Comment