அம்பகமுவ சாகித்திய விழா




(க.கிஷாந்தன்)
2018ஆம் ஆண்டிற்கான அம்பகமுவ பிரதேச சாகித்திய விழா அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரதீப் சுமனசேகர தலைமையில் 12.10.2018 அன்று இடம்பெற்றுள்ளது.
அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற குறித்த விழாவில் நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.புஷ்பகுமார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
இந்த விழாவினை அம்பகமுவ பிரதேச செயலகமும், கலாச்சார திணைக்களம் மற்றும் பிரதேச கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடத்தியிருந்தன.
இதன்போது, தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் இளங்கலைஞர் விருது பெற்ற கலைஞர்கள் மற்றும் மூத்த கலைஞர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.