எதிர்காலத்தில் கல்வி ரீதியாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் போது விளையாட்டுத்துறையையும் கிராம மட்டங்கள் ஊடாக அபிவிருத்தி செய்ய வேண்டும். தேசிய மட்டத்தில் வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதை விட ஒழுக்கம் கட்டுக் கோப்பான ஒரு சமூகத்தையுடைய பாடசாலை மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். சிறுவர் தினத்தை முன்னிட்டு உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் வைபவம் அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அவர் அங்கு தொடந்து பேசுகையில்
எதிர்காலத்தில் கொழும்புக்கு வெளியேயும் விரிவுபடுத்தி இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். சிறுவர் தினத்தில் இந்த நிகழ்வுக்கு வரக் கூடிய உடல் ஆரோக்கியமான நிலையில் இல்லை. எனினும் இந்தச் சிறார்களை வாழ்த்த வேண்டும் என்ற வகையில் நான் கலந்து கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கிரிக்கெட் உபகரணங்கள் 38 பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதில் மூன்று பெண்கள் பாடசாலைகள் கிரிகெட் கடினப் பந்து விளையாடும் பாடசாலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி சஹீட் எம். ரிஸ்மி, கொழும்பு மாவட்ட கிரிக்கெட் சபையின் செயலாளர், அதிபர்கள், விளையாட்டுத் துறை, கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment