யாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அச்சுவேலி பத்தமேணி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது அக்கிடங்கில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படதை தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன் நேற்று சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்படி இன்று மேலும் தோண்டப்பட்ட போது மேலதிகமாகவும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. கால், கை, விரல் மண்டையோடு பகுதிகள் மீட்கப்பட்டிருந்து.
இந்நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான ஆய்விகளை மேற்கொள்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுள்ளது.
இதேவேளை, மின்சார கம்பம் நாட்டும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ள நீதிவான் அனுமதியளித்தார். அத்துடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment