தாய்லாந்து பாங்கொக்கில் தற்போது நடைபெற்றுவரும் ஒருவாரகால பயிற்சிநெறியில் இலங்கையிலிருந்து சென்ற 32 கல்வித்துறைசார் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இப்பயிற்சிப்பட்டறை கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.நாளை .5ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இலங்கை கல்வியமைச்சு இதற்கான ஏற்பாட்டைச்செய்திருந்தது.
'உலக புதியகல்வியின் போக்கு' என்ற தலைப்பிலான பயிற்சிப்பட்டறையொன்றில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து 32 கல்வித்துறைசார் அதிகாரிகள் கடந்த (28)வெள்ளிக்கிழமை தாய்லாந்து பயணமானார்கள்.
இவர்களுள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைக்கல்வி மாவட்டத்திலிருந்து சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இம்முறை கல்விநிருவாகசேவை அதிகாரிகளுடன் கல்வியியலாளர் சேவையைச்சேர்ந்த 14பேர் கலந்துகொள்கிறார்கள்.
இலங்கையிலிருந்து சென்ற மூன்றாவது அணி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment