புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்காக ஜனாதிபதி பரிந்துரை செய்த நபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதியரசர் நலின் பெரேராவை பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்து, அவரது பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நலின் பெரேரா கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரை செய்யப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் நலின் பெரேராவை அந்தப் பதவிக்கு நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.

Post a Comment
Post a Comment