இலங்கைக்கு எதிராக எவ்வித இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹன்னா சின்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மார்கியு, பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ், கனடா தூதுவர் டேவிட் மெக்கினோத், ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொதட் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று சபாநாயகரைச் சந்தித்துள்ளனர்.
குறித்த பிரதிநிதிகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக் குறித்து, சபாநாயகருடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.
இதன்போது, தற்போதைய அரசியல் நிலைக் குறித்து தமது அதிருப்தியையும் பிரதிநிதிகள் சபாநாயகரிடம் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment