மேல் கொத்மலை நீர்தேக்கத்தில்




(க.கிஷாந்தன்)
மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக பொது மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நானுஓயா, தலவாக்கலை, லிந்துலை, அக்கரப்பத்தனை, கொட்டகலை, பொகவந்தலாவ பிரதேசங்களில் மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகின்றது.
அத்தோடு, ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் நீர்தேக்கத்தின் அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் அதிகாரிகள் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
அத்தோடு, தொடர்ந்து பிரதான வீதிகளில் பனிமூட்டங்கள் காணப்படுவதால் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் முன் விளக்குகளை (ஹெட்லைட்) ஒளிரவிட்டு செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.