(இர்சாத்)
அக்கரைப்பற்று வலயக் கல்வி மாணவர்களின் அயராத முயற்ச்சியினால், வலயக் கல்வி விஞ்ஞானக் கண்காட்சி கடந்த 10-14 வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் இதற்கென தமது நேர காலங்களையும், பெறறோர்களின் பணத்தையும் செலவளித்து நல்லதொரு எதிர்கால புத்தாக்குனர்களை உருவாக்குகின்ற முயற்ச்சி நம்பிக்கை கீற்றுக்களை நமக்கு விதைத்துள்ளது.
முற்றலும் இலவசமான இக் கண்காட்சியினை நாள் தோறும் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த மாணவர்களும், பெற்றோர்களும் பார்வையிட்டு வந்தனர்.
இன்றைய தினமும் இக் கண்காட்சி மாலை 5.30 மணிவரை இடம்பெறும் என எதிர்பார்த்த மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏமாற்றம்தான்.
இன்று மாலை 2.30 அளவில் அங்கு பார்வையிடச் சென்றபோது, நாளை பாடசாலை என்பதால், மாணவர்கள் இன்று நண்பகல் 12 மணியுடன் தமது காட்சிப் பொருட்களைக் கொண்டு சென்றதாகத் அங்குள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.
இன்று மாலை அங்கு சென்றோருக்கு மரக் கன்றுகளையே பார்க்க முடிந்தது. ”காட்சிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு விட்டன" என்று அங்கு விளக்கமளிக்கும் மாணவர்கள் கூறினர்.
இன்று விடுமுறை தினம் என்பதாலும் , பிரத்தியேக வகுப்புக்களுக்கும் விடுமுறை என்பதால், தமது பிள்ளைகளை அழைத்து வந்து பார்க் முடியாது பெரும் ஏமாற்றத்துடன் திரும்புவதாக இன்று மாலை அங்கு திரண்ட பெற்றோர்கள் அறிவித்தனர்.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரே, வலயக் கல்வி விஞ்ஞான கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினரே!
நேர காலத்துடன் நண்பகல் 12.30 இற்கு முடிவடையும் என்று அறிவித்தல் கொடுத்திருக்க வுண்டிய தார்மீகக் கடமை உங்களுக்குண்டு. அவவாறு செய்ய முடிந்திருக்காது போனால், தாங்கள் அடித்து வெளியிட்ட சுவரொட்டிகளிலாவது ஞாயிறு நண்பகலுடன் விஞ்ஞானக் கண்காட்சி நிறைவுறுகின்றது என்றாவது குறித்திருக்கலாம்.
இது போன்ற தவறுகளிலிருந்து இனிமேலாவது, பாடம் படிக்க வேண்டிய பொறுப்பு ஏற்பாட்டாளரகளுக்கும உண்டு.
முன்பொரு காலத்தில், அக்கரைப்பற்று ஆயிசா பாளிகா, அக்கரைப்ற்று முஸ்லிம் மத்திய கல்லுாரி போன்றவை அற்புதமான கிழக்கு மாகாணத்தின் மாணவர்களுக்கே விருந்து படைக்கும் கண்காட்சியினை கண்கொள்ளாக் காட்சியாக ஆக்கிக் தந்தது. அக்கரைப்பற்று ”முஸ்லிம் மத்திய கல்லுாரி வானொலி” என்ற பண்பலை நிலையமொன்றை உருவாக்கி அங்கிருந்து கிழக்கை வெளுக்கச் செய்தது இன்றும் ஞபாகப் பெட்டகத்தில் உண்டு.
Post a Comment
Post a Comment