நான்காவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி




இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது. 

பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

அணி சார்பாக தசுன் சானக 66 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 52 ஓட்டங்களைும் பெற்றனர். 

பந்துவீச்சில் முஈன் அலி 55 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 

அதன்படி இங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 02 விக்கட்டுக்களை இழந்து132 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இடையில் மழை குறுக்கிட்டது. 

இதன்காரணமாக டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.