ஹஸ்பர் ஏ ஹலீம்
இலங்கையின் தேசிய மற்றும் சமய சக வாழ்வுக்கான நாடாளுமன்றக் குழுவின் இரண்டாவது பிராந்திய மாநாடு, அம்பாறை, மொண்டி ஹோட்டலில் இன்று (01) இடம்பெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் நிலைபேறான தன்மைக்காக தேசிய மத ஒற்றுமை தொடர்பிலான விளக்கவுரைகள் இடம்பெற்றன.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு தொடர்பிலான விடயங்களைக் கொண்டு செல்வதற்கான நாடாளுமன்றக் குழுவினுடைய நிகழ்வாகவும் அமையப் பெற வேண்டுமென்பதே இதன் எதிர்பார்ப்பாகக் காணப்படுகிறது.
இதில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, புனர்வாழ்வு மீள் குடியேற்றம், இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, தபால் தொலைத் தொடர்புகள் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம், சமய நல்லிணக்க மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Post a Comment
Post a Comment