கிண்ணியா பிரதேச சபைக்கான புதிய தவிசாளர்கள்





( அப்துல்சலாம் யாசீம்)

கிண்ணியா  பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு 02/11/ 2018  ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளன.

கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்து தவிசாளர் ,உப தவிசாளர் தெரிவு செய்யப்பட்டு பிரதேச சபையின் அமர்வுகள் நடைபெற்று கொண்டிருந்த வேளை தவிசாளர் பதவியை வகித்துவந்த கே.எம்.நிஹார் தவிசாளர் பதவியிலிந்து பதவி விலகுவதாக இராஜினாமா கடிதத்தினை  உள்ளூராட்சி ஆணையாளரிடம் 11/10/2012 ஆம் திகதி வழங்கியிருந்தார்.

இதே வேளை பிரதேச சபையின் நிருவாக நடவடிக்கைகள் அனைத்தும் உப தவிசாளர் வாஸித் அவர்களின் தலைமையில்  நடைபெற்று வந்தது


பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட தெரிவு  2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என்.மணிவண்ணன்   தலைமையில் கிண்ணியா பிரதேச சபையில்  கூடுகின்றது

இதன் போது பிரதேச சபைக்கான புதிய  தவிசாளர், உப தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ளதாக பிரதேச சபை செயலாளர்  எஸ்.அஸ்வத்கான் தெரிவித்தார்.