கொழும்பு கோட்டைக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவையை விரைவில் ஆரம்பிப்பது பற்றி புகையிரத திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
தலைமன்னாருக்கும், மதவாச்சிக்கும் இடையிலான பகுதியில் இரண்டு பாலங்களை மீளமைப்பதற்காக புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
பால மீளமைப்பு பணிகள் பூர்த்தியாகி இருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்தார்.
நாளை பாலங்களை பரிசீலித்த பின்னர், மாலை தொடக்கம் மீண்டும் புகையிரத சேவையை தொடங்கக்கூடியதாக இருக்குமென பொதுமுகாமையாளர் நம்பிக்கை வெளியிட்டார்.
மன்னாருக்கும் , முருங்கனுக்கும் இடையிலான பழைய பாலம் மீளமைக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஹிரிகொன் நிறுவனம் பழைய பாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலத்தை அமைத்திருந்தது. இந்த பாலம் நாளை புகையிரத திணைக்களத்திடம் சம்பிர்தாயபூர்வமாக ஒப்படைக்கப்படும்
(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment
Post a Comment