(க.கிஷாந்தன்)
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 03.10.2018 அன்று மாலை 3 மணியளவில் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தே க்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.
Post a Comment
Post a Comment