நிதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த




நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

இது தொடர்பான நிகழ்வு நிதியமைச்சில் இடம்பெற்றது. 

இதன்போது உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

சுனாமி ஏற்பட்ட காலத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் சீர்படுத்த முடிந்ததாக அவர் கூறியுள்ளார். 

யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் சரியான திட்டமிடல் ஊடாக தான் நிதியமைச்சர் என்ற வகையில் செயற்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

இன்று நிதியமைச்சு பல சவால்களை எதிர்கொள்ள இருப்பதாகவும், வரி செலுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்றும், பொருளாதாரம் சம்பந்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.