அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள் மீண்டும் விளக்கமறியலில்




வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மூன்று பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்களை சீகிரியா பொலிஸார் கடந்த 26ம் திகதி கைது செய்தனர். 

சீகிரியாவிற்கு அருகில் உள்ள பிதுரங்கல கல் மீது ஏறி இளைஞர்கள் சிலர் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்ததால் பாரிய சர்ச்சை ஏற்பட்டது.