( அப்துல்சலாம் யாசீம்)
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் தேசிய ரீதியில் மொழி உரிமைகளை பேணுவதற்காக தன்னார்வமாக செயற்பட்டவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் இந்நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த அங்கீகாரத்தை வழங்கி வைத்தார்.
எஸ்.பிரணவஜோதி திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டதுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து பல சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதுடன் தற்போது யாழ் வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment