கிழக்கு மாகாணத்தில் நிர்வாகத்தில் மாற்றங்கள்




(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக எம்.வை.சலீம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவினால் நேற்று( 01)நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதேவளை மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் வெற்றிடத்திற்காக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன் மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில்  அபிவிருத்தி செயற்பாடுகளை  மேம்படுத்தும் நோக்கில்  இவ்விடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்கொல்லதெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை எனவும்  தெரியவருகின்றது .

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையையும். சம நல்லிணக்கத்தையும் நல்லாட்சியையும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.