சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் சம்பந்தமாக, மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு, மட்டக்களப்பு உல்லாச விடுதியில் சனிக்கிழமை (20) காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை இடம்பெறவுள்ளதென, இத்திட்டத்தை அமுல்படுத்தும் உணர்திறன் நுண்ணறிவுக்கான வாழ்க்கைத்திறன் பயிற்சிக் குழுவின் திட்ட இணைப்பாளர் எம்.எஸ்.எப். ஷாமிர் தெரிவித்தார்.
இத்திட்டம், அவுஸ்திரேலிய அரச நிதி அனுசரணையுடனும், இலங்கை விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் பங்களிப்புடனும் இலங்கையில் அமுலாகின்றது.
இந்நிகழ்ச்சித் திட்டம் சம்பந்தமாகத் தெளிவுபடுத்தும் செயலமர்வின் பிரதான வளவாளராக, சப்ரகமுவ பல்கலைக் கழகப் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் கலந்துகொள்ளவுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் “உள்வாங்கல் வளர்ச்சிக்கான ஆற்றல்” திட்டத்தின் மூலம், இலங்கையில் சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள், அவற்றைச் சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து இதன்மூலம் தெளிவுபடுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment