தப்பியோடிய நபர் விபத்தில் சிக்கினார்




(அப்துல்சலாம் யாசீம்)

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் காயங்களுடன் தப்பியோட முற்பட்டபோது லொறி ஒன்றுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் இன்று அதிகாலை (22)  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் 
கோமரங் கடவல, பக்மீகம  பகுதியைச் சேர்ந்த டி. பி.ஐயவீர பண்டார 29 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலாளி அவருடன் கடமையாற்றி வந்த இளம் பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருந்த நிலையில் பெண்ணின் வீட்டுக்கு சென்று பேசிக் கொண்டிருந்தபோது அவரது மகன் பாதுகாப்பு உத்தியோகத்தரை  வாளால் வெட்டிய நிலையில் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் தப்பி ஓடிய போது லொறியுடன் மோதியதாகவும் தெரியவருகின்றது .

இதனையடுத்து லொறியில்  மோதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது கால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுவதாகவும் லொறியுடன் மோதிய நிலையில் லொறியின் சாரதி அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் முன்னாள் இராணுவ வீரர் எனவும் தெரியவருகின்றது

 இதேவேளை வெட்டுக்காயங்கள் மற்றும் லொறியுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி சாரதியை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சீனக்குடா  பொலிஸார் தெரிவித்தனர்.