கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான கெளரவ அப்துல்லா மகரூப் அவர்களினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பகுதியில் அதிக அளவிலான மக்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் பள்ளிவாயல் ரஹ்மானிய பள்ளிவாயல் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் இதனை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் எனவும் கிண்ணியா நகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கையினை அடுத்து திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மகரூப் அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளார்.
கிண்ணியா ரஹ்மாணியா ஜும்மா பள்ளிவாயலின் புணர் நிர்மாணத்திற்காக ரூபா 500,000 (ஐந்து இலட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment