இரண்டாக பிரிந்தது, புகையிரதம்




இன்று (03) மாலை 5.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அவிஸ்ஸாவெல்ல நோக்கி பயணித்த புகையிரதத்தில் இருந்து இயந்திரம் வேறாக பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பொரள்ளை, கொட்டா வீதி புகையிரத கடவைக்கு அருகில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் புகையிரத ஓடு பாதை மற்றும் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் பொரள்ளை மற்றும் ராஜகிரிய வீதியில் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.