செல்பேசியே,விபத்துக்களுக்கான காரணம்






வீதி விபத்துக்களைக் குறைக்க வேண்டுமானால் காலாவதியான சட்டங்களுக்குப் பதிலாக புதிய சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இனங்காணப்படாத வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானவர்கள் சார்பில் இழப்பு வழங்கும் நோக்கத்துடன் குறித்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

வீதி விபத்துக்களைக் குறைக்க சட்ட திட்டங்களை கடுமையாக்குவது அவசியம். கூடுதலாக விபத்துக்கள் நிகழும் ஸ்தானங்களைக் கண்டறிந்து அங்கு சிசிரிவி கமராக்களைப் பொருத்தலாம். பாதசாரிகளும், வீதிப் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திக் கொண்டு வீதியைக் கடக்கும் பாதசாரிகள் காரணமாக கூடுதல் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)