யுவதியின் ஆடையை களைந்து துரத்தியவர் மீது எறிந்த கடத்தல்காரர்




யாழில் முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது. ABI_9466 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியிலேயே குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளார்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
யாழ்.செம்மணி பகுதியில் (யாழ்.வளைவுக்கு) அருகில் வைத்து வீதியால் சென்ற யுவதியை முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
அதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்து முச்சக்கர வண்டியினை மடக்கி பிடிப்பதற்கு துரத்தி சென்றவேளை , கடத்தல்கார்கள் முச்சக்கர வண்டியில் மிகவேகமாக பயணித்து உள்ளனர்.
ஆடியபாதம் வீதி ஊடாக மிக வாகன நெரிசல்கள் அதிகமான கல்வியங்காட்டு சந்தி, மற்றும் திருநெல்வேலி சந்தி உள்ளிட்ட பகுதிகள் ஊடாக மிக வேகமாக பயணித்துள்ளனர். அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தவர்களும் தொடர்ந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு அவர்களை பின்தொடர்ந்த வேளை , யாழ்.மருத்துவ பீட வளாகத்திற்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட பெண்ணின் ஆடையினை கழட்டி எறிந்து உள்ளனர்.
அதனால் முச்சக்கர வண்டியை பின் தொடர்ந்து சென்றவர்கள் அதற்கு மேல் தொடர்ந்து செல்லாது அவ்விடத்தில் நின்றுள்ளனர். அதன் பின்னர் முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை குறித்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது.