ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பில்




ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை முதல் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றுகூடி உள்ளனர். 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களும் அங்கு ஒன்று கூடி பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதன்போது கருத்து வௌியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, சதித்திட்டம் ஊடாக புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார். 

இதேவேளை யாருக்கும் தெரியாமல் இரகசியமான முறையில் திருட்டுத் தனமாக புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார். 

அதேநேரம் இதன்போது கருத்து வௌியிட்ட, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறினார்.