பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு




பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்று ஓய்வு பெற உள்ளார். இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதி பிரதம நீதியரசராக பதவியேற்றார். 

பிரியசாத் டெப் நீதித் துறையில் சுமார் 40 ஆண்டுகால சேவையாற்றியுள்ளார். 

1978ம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியில் இணைந்த பிரியசாத் டெப் 1996ம் ஆண்டு அரச மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலாக நியமனம் பெற்று 2007ம் ஆண்டு அரச சொலிசிஸ்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். 

2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர் 2017ம் ஆண்டு பிரதம நீதியரசராக நியமனம் பெற்றார்.