மட்டக்களப்பு, கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரனின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட சத்துருகொண்டான், பிள்ளையாரடி பிரதான வீதியோரங்கள், ஆற்றங்கரையோர பகுதியில் குப்பகைளை அகற்றித் துப்பரவு செய்யும் பணிகள்,நேற்நு (1) முன்னெடுக்கப்பட்டன.
இந்த டெங்கொழிப்பு நடவடிக்கை, மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம், விபுலானந்தா வித்தியாலயம் , கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் , நாவலடி நாமகள் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலை அதிபர்களின் தலைமையின் கீழ், 80 மாணவர்களுடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம். பாலசுபிரமணியம், பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பாதுகாப்பு குழு உறுப்பினர், மாநகரசபை ஊழியர்கள் இணைந்து குப்பகைளை அகற்றித் துப்பரவு செய்யும் பணி ஈடுபட்டன
Post a Comment
Post a Comment