குரல் மாதிரி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிப்பு






பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் மாதிரியின் அறிக்கை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இன்று இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் குரல் மாதிரிகள் அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. 

இது தொடர்பான அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பிக்குமாறு அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.