கஞ்சா செடிகளை வளர்த்வருக்கு தண்டம்




( அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை ஆறாம் கட்டைப் பகுதியில் மூன்றரை அடி உயரமான கஞ்சா செடிகளை வளர்த்து வந்த  இளைஞனுக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபருக்கு இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி, ஆறாம்கட்டை  பகுதியைச் சேர்ந்த நிக்கலஸ் எட்மின்   (30 வயது) எனவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவெளி பொலிஸார் இன்று சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற  மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

 சம்பவம் குறித்து  தெரியவருவதாவது திருகோணமலை நிலாவெளி பகுதியில் கிணற்றடியில் கஞ்சா செடி இருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட பொலிஸார்  சோதனையிட்டு போதும் மூன்றடி உயரமான கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது தண்டம் அறவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்