"இறுதித் தொகை: ரூ. 940’'




 ரூ. 1,000 வழங்கினால் துறைக்குப் பாதிப்பாம்
 ரூ. 1,000 வேண்டுமானால், உற்பத்தித் திறன் அடிப்படையில் தானாம்
 பொது உடன்பாட்டுக்கு வருமாறு அழைப்பு
பா.நிரோஸ்
தமது நாளாந்த ஊதியமாக, 1,000 ரூபாயை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்த போதிலும், அக்கோரிக்கையை நிராகரித்துள்ள இலங்கை பெருந்தோட்டச் சம்மேளனம், நாளாந்த ஊதியமாக, 940 ரூபாயையே அதிகபட்சமாக வழங்க முடியுளின் நாளாந்த அடிப்படைச் சம்பளமாக, 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை, பலம்பெற்று வரும் நிலையில், பெருந்தோட்டச் சம்மேளனத்தின் இம்முடிவு, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில், அடுத்ததாக என்ன முடிவை, தொழிற்சங்கங்கள் எடுக்குமென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
தமது முடிவு தொடர்பில், அறிக்கையொன்றை வெளியிட்ட பெருந்தோட்டச் சம்மேளனம், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 3 யோசனைகளும், தொழிற்சங்கங்கள் ஊடாக நிராகரிக்கப்பட்டன எனவும், 1,150 ரூபாயை, நாளாந்த ஊதியமாக அவர்கள் கோரினர் எனவும், இக்கோரிக்கை, பெருந்தோட்டத் துறையை முன்னெடுத்துச் செல்ல அழுத்தம் செலுத்துமெனவும் குறிப்பிட்டது. இந்தத் தொகையை, தமது சம்மேளனத்தால் செலுத்த முடியாதெனக் குறிப்பிட்ட அது, அதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை என்றும் குறிப்பிட்டது.
அத்தோடு, இவ்வறிக்கையில் தனது கருத்தை வெளியிட்ட, சம்மேளனத்தின் தலைவர் சுனில் போஹோலியத்த, "பெருந்தோட்டத் துறையில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சிறந்த வருமானத்தை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம். இருப்பினும் அதற்காக, துறையை​ நடத்திச் செல்வதற்கும் இலட்சக்கணக்கானோரின் வாழ்வாதார நலன்புரி விடயங்களை அவதானத்துக்குட்படுத்த முடியாதென்பதை, அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையால் இந்நிலையைக் கருத்திற்கொண்டு, பொது உடன்பாட்டுக்கு வருமாறு, தொழிற்சங்கங்களிடம் நாம் கேட்டுகொள்கின்றோம்" என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை ஊதியம், 500 ரூபாயாகக் காணப்படுவதோடு, ஏனைய கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக, நாளாந்தம் 805 ரூபாய் கிடைத்தது எனவும், இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில், தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கை காரணமாக, ஊதியத்தை 20 சதவீதத்தால் அதிகரித்து, 600 ரூபாயாக உயர்த்த, தமது தரப்புச் சம்மதம் தெரிவித்திருந்தது எனவும், சம்மேளனம் தெரிவித்தது.
தமது புதிய திட்டத்தின் அடிப்படையில், வரவு ஊக்குவிப்பு, உற்பத்தித்திறன், விலைப் பிரிப்பின் மேலதிகக் கொடுப்பனவு, ஊழியர் சேமலாப நிதி ஆகியன உள்ளடங்கலாக, நாளாந்த ஊதியமாக 940 ரூபாய் வரை உயர்த்த உத்தேசிக்கப்பட்டது எனத் தெரிவித்தது.
இம்முறை மூலம், தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 3,375 ரூபாய் அதிகரிப்பு ஏற்படுமெனவும் அச்சம்மேளனம் தெரிவிக்கிறது.
அத்தோடு, தொழிற்சங்கங்கள் தற்பொழுது கோரும் விதமாக, தொழிலாளருக்கு நாளாந்தம் 1,000 ரூபாயைக் கொடுப்பனவாகச் செலுத்த வேண்டுமாயின், துறைக்கு உள்ள ஒரே தீர்வு, உற்பத்தித் திறனை மய்யப்படுத்திய திட்டத்துக்குச் செல்வது தான் எனவும், அவ்வறிக்கை குறிப்பிட்டது.