(க.கிஷாந்தன்)
கொட்டகலை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் 22.10.2018 அன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக சிலருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதன் காரணமாக 23.10.2018 அன்று காலை 8 மணியளவில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உணவு ஒவ்வாமை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment