(க.கிஷாந்தன்)
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவன் பசிந்து பாஷித்த ரணசிங்க 196 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
2018ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர் கினிகத்தேனை பகுதியை சேர்ந்தவராவார்.
இதேவேளை அட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான ஆனந்தன் தர்வின் 195 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
மேலும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவின் மாணவன் குமார் கிர்திஸ் 194 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment