மட்டக்களப்பு மத்தி வலயத்தில் உள்ள காத்தான்குடி, ஏறாவூர், கோறளைப் பற்று மேற்கு (ஓட்டமாவடி) ஆகிய மூன்று கல்விக் கோட்டங்களின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வருடந்தோறும் வீழ்ச்சியை நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த மூன்று வருடங்களில் வெளியான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளை பரிசீலிக்கும் போது 2016 ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 74 மாணவர்களும், கோறளைப் பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் 146 மாணவர்களும், காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 130 மாணவர்களுமாக 350 மாணவர்கள் தகைமை பெற்றிருந்தனர்.
இவ் எண்ணிக்கை 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 65 எண்ணிக்கையால வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 46 மாணவர்களும், கோறளைப் பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் 134 மாணவர்களும், காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 105 மாணவர்களுமாக 285 மாணவர்கள் தகைமை பெற்றிருந்தனர்.
இன்று வெளியான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை மேலும் 15 ஆல் குறைவடைந்து ள்ளது.
ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 42 மாணவர்களும், கோறளைப் பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் 107 மாணவர்களும் காத்தான்குடி கோட்டத்தில் 121 மாணவர்களுமாக 270 பேர் தகைமை பெற்றுள்ளனர்.
வருடந்தோறும் புலமைப்பரிசில் பரீட்சையில் தகைமை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டு செல்வதால் எமது மாவட்ட விகிதாசார அளவு பெரும்பான்மை இனத்துக்கு தாரை வார்க்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment