ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நலின் பெரேரா பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதியரசர் நலின் பெரேராவை பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்து, அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதுவரை பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் இன்றுடன் (12) ஓய்வு பெற்றதையடுத்து நீதியரசர் நலின் பெரேரா அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 46வது பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள நலின் பெரேரா கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment