302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம்




தேசிய பாடசாலைகள் சிலவற்றில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டின் 302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு கல்வியமைச்சுஎதிர்பார்க்கின்றது.

இதற்கான நேர்முகப்பரீட்சை நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்வதுடன் 08 வருடங்களுக்கு மேல் ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தேசிய பாடசாலைகளுக்காக தெரிவு செய்யப்படும் அதிபர்களை அடுத்த வருடம் முதல் அதிபர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.