தசுன் சானக நிரோசன் திக்வெல திசார பெரேரா ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுள்ளது
நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே சதீர சமரவிக்கிரமவை இழந்தபோதிலும் நிரோசன் திக்வெல் தசுன் சானக மற்றும் திசார பெரேராவின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக 273 ஓட்டங்களை பெற்றுள்ளது
நிரோசன் திக்வெல 53 ஓட்டங்களைபெற்று ஆட்டமிழந்தார். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை தனது அதிரடியால் திணறச்செய்த தசுன் சானக 66 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
தசுன் சானக தனது 66 ஓட்டங்களில் ஐந்து சிக்சர்களையும் பெற்றிருந்தார்
திசார பெரேரா 44 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார் அவர் ஏழாவது விக்கெட்டிற்காக அகில தனஞ்செயவுடன் இணைந்து 56 ஓட்டங்களை பெற்றார்
Post a Comment
Post a Comment