யானைகளின் உயிரிழப்புகள்




இலங்கையில் ஆண்டு தோறும் சராசரியாக 250 யானைகள் உயிரிழப்பதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தற்போதுள்ள புள்ளி விவரங்களின்படி 6000 யானைகள் இருக்கின்றன.
2017ஆம் ஆண்டு - 256 யானைகள் உயிரிழந்துள்ளன. 2016ஆம் ஆண்டு - 279 யானைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு பிரதான காரணம் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உடவள வனப்பகுதி என்பது ஒருகாலத்தில் யானைகளின் சொர்கபுரியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவருவதாக யானைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள கலாநிதி ப்ருதிராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தாயை விட்டு நிர்கதியாகும் யானைகள் உடவள சரணாலயத்தில் 3 - 5 ஆண்டுகள் பராமரிக்கப்படுகின்றன. பின்னர் நாடுகளில் கொண்டு சென்று விடப்படுகின்றன.

யானைகள்

உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகளை மக்கள் கலைக்கின்றனர். இதனால் திசைமாறி யானைகள் ஓடுவதாலேயே பெரும்பாலான குட்டிகள் நிர்கதியாகின்றன என ப்ருதிராஜ் மேலும் தெரிவித்தார்.
உடவள வனப்பகுதிக்கு முன்னர் சென்றால் 50 - 100 யானைகளை சாதாரணமாக பார்க்க முடியும். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. காடுகள் அழிக்கப்படுவதே இதற்கு பிரதான காரணம் என ப்ருதிராஜ் தெரவித்தார்.