இந்தோனேசியாவில் சுமார் 2 லட்சம் மக்களுக்கு உடனடி உதவி தேவை




வாஷிங்டன்:

இந்தோனேசியாவில் சமீபத்தில் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தோன்றியது. இந்த நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டிடங்கள் சிதைந்து, மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அன்று மாலையே சுனாமியும் அந்த நாட்டை தாக்கியது.


இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ஐ.நா சபை, இந்தோனேசியாவில் 1 லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. #Indonesiaquaketsunami