#இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்.
இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாக முடக்கத்துக்கு காரணமான 15 மாணவர்கள் இன்று, அக்கரைப்பற்றுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இவர்களை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க அக்கரைப்பற்று, கௌரவ நீதிபதி கட்டளையிட்டார்.
இன்று மாலை 6 மணியளவில் திறந்த நீதிமன்றில் அக்கரைப்ற்று பொலிசார் சந்தேக நபர்கள் 15 பேரையும் ஆஜர்படுத்தி, சமரப்பணம் ஒன்றைச் செய்திருந்தனர். தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தை முடக்கியிருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு நீதிமன்றினால், கட்டளை பிறப்பிக்கப்பட்ட வேளை, அதனை உதாசீனப் படுத்தி செயற்பட்டதுடன்,மன்றினால் விடுக்கப்பட்ட பிடி விறாந்தினையும் நிறைவேற்றச் சென்ற வேளையில், அதனையும் பொருட்படுத்துமாறு செயற்பட்டதனால், நீதிமன்றின் கட்டளையினையும் அவமதித்து செயற்பட்டதால், குறித்த சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வேண்டியிருந்தனர்.
பொலிசார் சார்பில் செய்யப்பட்ட சமர்ப்பணம், சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தையும் நுனித்து ஆராய்நத நீதிபதி இவர்களை நவம்பர் 1ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தவிட்டார்.

Post a Comment
Post a Comment