கொழும்பில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர்




கொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் கூறியுள்ளது. 

அதில் பெரும்பாலானவர்கள் 1989 இல் காணாமல் போனவர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அலுவலகம் கூறுகிறது. 

காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் மேல் மாகாணத்தில் காணாமற்போன குடும்ப அங்கத்தவர்களை சந்தித்து, நேற்று16 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது. 

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன. 

அந்த அலுவலகம் மக்களுடன் நடத்துகின்ற இந்த சந்திப்பு மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அடுத்த சில வாரங்களில் நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களிலும் இந்த கலந்துரையாடல் நடைபெறும் என்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் கூறியுள்ளது.