க்ரைமியா: கல்லூரி வளாகத்தில் குண்டுவெடிப்பு, 10 பேர் பலி




ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட க்ரைமியா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் பலியானார்கள். டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
கேட்ச் என்னும் பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த கேட்ச் பகுதியில்தான் ரஷ்யா, பெனின்சுலா - ரஷ்யா இடையே பாலம் கட்டியது.
கேஸ் குண்டுவெடிப்பாக இது இருக்கலாமென முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய பாதுகாப்பு படை அதிகாரி, நிச்சயமாக இதுவொரு பயங்கரவாத தாக்குதல் என்கிறார்.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது இந்த கல்லூரியின் இயக்குநர் கல்லூரி வளாகத்தில் இல்லை.
"ஆயுதமேந்தியவர்கள் கல்லூரிக்குள் நுழைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள். எங்கும் பிணங்களாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் பிணங்கள். நிச்சயம் இதுவொரு பயங்கரவாத தாக்குதல்தான்" என்று கல்லூரி இயக்குநர் தெரிவித்தார்.