1000ருபா சம்பள உயர்வை பெற




(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பிரிவிற்குட்பட்ட பத்தனை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து சுமார் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது 08.10.2018 அன்று தோட்ட ஆலயத்திற்கு முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி முன்னெடுக்கப்பட்டது.
தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும், 1000ருபா சம்பள உயர்வையும் காலம் தாழ்த்தாமல் மலையக அரசியல் வாதிகள் பெற்று தரவேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், அரசியல்வாதிகளும், தொழிற்சங்க அதிகாரிகளும் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக கூறிய பொய்யானவார்த்தைகளை இனிமேலும் நம்பபோவதில்லை என தெரிவித்த அவர்கள், சம்பள அதிகரிப்பினை பெற்றுகொடுக்காவிட்டால் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினை உடனடியாக நிறுத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.