இந்தியாவில் ரேசர்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் ரேசர் போன் 2 வெளியீடு அதிகாரப்பூர்வமாக
உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.
சீனாவின் அன்டுடு பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ள விவரங்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் உறுதியாகியுள்ளது. அதன்படி ரேசர்போன் 2 மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய ரேசர் ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் 5.7 இன்ச் QHD ஷார்ப் IGZO ஸ்கிரீன், குவால்காம் க்யூ-சின்க் வசதி வழங்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரேசர்போன் 2 அன்டுடு தளத்தில் 2,83,397 புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, கேமரா மற்றும் பேட்டரி சார்ந்த தகவல்கள் அறியப்படவில்லை.
முந்தைய ரேசர் போன் போன்று புதிய ரேசர் போன் 2 மாடலும் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ரோக் போன், சியோமி பிளாக் ஷார்க் மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment